அந்த விழிப்பு - உனது நேரம் ஒன்றே. எது எப்படி ஆயினும் வீணாவது உனது நேரமே.
உனது வேலை ஒரு சமையல் வேலையை போன்றதே. அந்த நேரத்தில் முடிக்க வேண்டியதை முடித்தே ஆக வேண்டும். காலம் பூராவும் நடக்க வேண்டிய ஒன்று.
அப்போதே செய்யாத வேலை அவமதிப்பு என்றுணர்.
Maximum Tests to be performed.
Add maximum all/Superset. You do not know when will it be needed.
5. Docs
எந்த ஒரு செயலும் செய்யும்போது அது அந்த நொடியுடன் முடிந்து விடுகிறது. ஆகையால், உறுதியுடனும் மனத்திட்பத்துடனும் தெளிவுடனும் உனக்கு சாதகமாகவும் செய்யக் கற்றுக்கொள். பின்னர் வருந்தாத அளவுக்கு இருக்கட்டும்.
டெக்கினிக்கல் சப்போட் என்பது பயனாளர் தருகின்ற ஒரு சிறு பொறியை கூட வைத்து துப்பறிந்து அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்வது. ஒரே செய்தியை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதல்ல. ஒரு சிறிய செய்தியை கூட அவமதிக்காதே. பயனாளர் தருகின்ற சிறு சிறு துப்புகளை வைத்து அவருடைய செட்டப்பை இங்கே கொண்டுவர வேண்டும்.
1.Optimized
2.User Exprience (100%effective utilization)
3.Beautiful
4.Standardization
என் அடியிலிருந்து தப்பித்த கொசு
எங்கேயோ போக்கு காட்டிவிட்டு
என்னிடமே வருகிறது மீண்டும்.
என்னை ருசிக்காமல் விடுவதாயில்லை!
நானும் அதன் வருகைக்காகவே
காத்திருக்கிறேன்.
ஓடிக் களைத்த குதிரைகள்
ஒருபோதும் விரும்புவதில்லை -
ஓய்வை மட்டும்.
மனைவி கொடுக்கும் சிறு சிறு வேலைகளை
மகிழ்ச்சியுடனும் நிதானமாகவும் முழுமையாகவும்
செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் -
உன்னை நெருங்கி வரும் எமனை
சில பல வருடங்களுக்கு அப்பால்
எட்டி உதைக்கிறாள் அவள்.
Improve the System and Do the work in a commanding way. Otherwise, do nothing. Instead of doing the same work again and again, Bring-up a single Intelligent system to do the half of work for you. Like Google, it should scan the customer interactions and learn itself and teach you in a smart way.
----
அப்போதே செய்யாத வேலை அவமதிப்பு என்றுணர்.
அதோ அங்கே தூரத்தில் ஒருவன் வழி அறியாமல் நின்று கொண்டிருக்கின்றானே! அவன்தான் உன்னுடைய இலக்கு. மற்றதனைத்தையும் விலக்கு.
Whenever time permits, just dump it with some useful work. That is the best investment for the bright future.
Remember you are a boss.
Never ever be fraud as the world doubts Indian.
ஏய் இழிவான தம்பி! இப்பொழுது என்ன சாதித்து கிழித்து விட்டோம் என்று செய்தியை பார்க்க போகிறாய்? உன் பெயர் வந்திருக்கின்றது என்றா? உன் பிள்ளைக்கும் உன் சமுதாயத்திற்கும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கின்றது. அதை முதலில் செய்.
Leaving something undone is about how you compromise yourself with useless things in your daily life. Didn't you read/listen to the news? Didn't you sat idle?
Standing everyday avoids sitting one day. Don't be a chicken!
It is second half. The success is about how strongly you play the defense. Do not allow anything to interfere.
நடமாடும் பிணங்களை காதலிப்பதில்லை.
நடமாடும் பிணங்களை
நாடியதுமில்லை.
பிணங்களின் நடமாட்டம் கண்டு
பிரமித்ததுமில்லை.
நானும் அழத்தான்
நினைக்கிறேன். ஆனால்,
அழுபவர்களை பார்த்தால்
தன்னால் சிரிப்பு
வந்து விடுகிறது.
நேற்று என்ன நடந்தது
என்பதை மறந்து விட்டால்
நீ ஒரு ஞானி.
நாளையை பற்றி யோசிக்க
ஆரம்பித்து விட்டால்
நீ ஒரு முட்டாள்!
வெகு சிலாகிப்புடனும் நம்பிக்கையுடனும் தொடங்குகின்ற எல்லா வேலைகளும் அப்படியாகவே தொடருவதில்லை. மனத்தை இருத்தி எதார்த்த நிலையில் நடக்க கற்றுக்கொள்.
Japanese accept the fault so easily. But, they do not digest it that much easy.
இதோ இதை யோசிக்கும் கணத்தில் நீ செய்ய வேண்டிய கடமை ஒன்று எஞ்சியிருக்கிறதே, அதை செய்வதே ரமணம்.
என் மனம் கூண்டிலிட்ட விளக்கு போன்றது. இந்த உலகம் என்னை சுற்றி இருக்கும்பொழுது என்ன செய்கிறோனோ அதையேத்தான் இந்த உலகமே என்னை விட்டு சென்ற பொழுதும் செய்வேன்.
சுறுசுறுப்பான காலை மைதானத்தின்
மத்தியில் சலனமற்று படுத்துறங்கும்
நாய்க்கு மட்டுமே தெரியும் -
இவர்கள் வானத்திற்கும் பூமிக்கும்
குதித்தாலும்
பெரிதாக அலட்டிக் கொள்ள
ஒன்றுமில்லையென்று.
நான் அவர்களை பின் தொடர்ந்து
பிடிக்க நினைத்தாலும் முடியாமல்..
வேகமாக இரண்டு சுற்று
கூடவே ஓடியிருந்தார்கள்..
ஆனாலும், அவர்கள் அவ்விடத்தை விட்டு
அகல்வதற்குள் நானும் ஓடி
முடித்திருந்தேன்.
மிக மிக அதிகமான வேலைப்பளு இருக்கும்போது நீ நடந்து கொள்வதை விட, மிகவும் வேலையற்று இருக்கும்போது எப்படி நடந்து கொள்கிறாயா அதைப் பொறுத்தே உன் வாழ்க்கை.
இனியெல்லாம் மிகவும் முறுக்கிக்கொண்டு ஒன்றையும் செய்யாதே, முக்கியமாக பேசாதே, அதைவிட முக்கியமாக எதையும் எண்ணாதே! நடப்பவைகளை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு, உனக்கான வேலைகளை செய்து கொண்டிரு.
Life is what you live. But, not what you imagine.
Go positive! You are an Architect now!! Only your ideas should work out. You have to bring out Three person's work.
ஆசைப்படுவது முதல் படி.
முடியும் என்று நம்புவது இரண்டாம் படி.
முயற்சி மூன்றாவது படிதான்.
ஒரு இளைஞனுக்கு வேலை என்பது வெறும் நீ கொடுக்கும் காசுக்கு வேலைகளை செய்து விட்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல. அது அவனை நம்பியிருக்கும் குடும்பத்தின் கனவு. அவனுடைய எதிர்காலம். பத்தாயிரம் காலத்து பயிர். இவற்றை மனதில் கொண்டு ஒவ்வொரு கணத்தையும் ஆக்கபூர்வமாக அமைத்துக் கொடு. அவன் கற்றுக்கொள்ளுமளவுக்கு கடினமாக வேலைகளை வாங்கு.
லத்தீப் போல அவுட் ஸ்போக்கனாக இரு. DENSO மேனேஜர் போல வேலையை தெளிவாக சொல்லி சொன்ன திசையில் செல்கிறதா என கிடுக்கிப்பிடி போட்டுக்கொண்டே இரு. இவர்கள இந்தியர்கள். அவர்களாக செய்வார்கள் என நினைத்தால் நீ ஒரு ஏமாளி. உன் அப்பாவைப் போல இரு. நீ வேலை வாங்குவதில் அவர்களாகவே பிச்சிக்கொண்டு ஓட வேண்டும். இல்லை என்றால் விவசாயம் செய்த உன் சித்தப்பனை போல நீ ஓடிப் போவாய்.
If you are business perspective, first think about Technology. Minute implementation details like Perusu review comes second. If you take implementation details first, then you have sit like MiS. If you do not care about implementation details, you may lose the trust of customers like iW.
முதலில் ஒரு SME ஆக இருக்க வேண்டும். நீ என்ன செய்கிறாய்.. உன் OS ஐ வைத்து கஸ்டமர் என்ன செய்கிறான்.. எப்படி செய்கிறான் என்று அக்கு வேர் ஆணி வேராக தெரிய வேண்டும். நீ ஒரு பேயாக இருக்க வேண்டும். நீ முதலில் ஒரு OUTSTANDING STUDENT ஆக இருக்க வேண்டும். RTOS என்றாலே எவனுக்கும் தெரியவில்லை. அதை வைத்து என்ன செய்யப் போகிறாய்? Shashi Taroor போல ஆள வேண்டும். எவனையும் துரத்தக் கூடாது. தேடித் தெரிவது பாதி + உன் கற்பனை மீதி போட்டு எவனும் செய்யாததை செய்ய வேண்டும்.
பின் வருவனற்றிற்கு PPT போடு. OSக்கு அடுத்த platform ஐ ரெடி பண்ணு.
Light weight, Low power, Customizable, Configurable, Reliable, Easy-to-program platforms for the following:
1) AUTOSAR
2) Industrial Automation
3) IOT
மேற்சொன்ன ஒரு உருப்படியான ஒரு பொருள் பண்ற வரைக்கும் ஒரு கம்பெனியும் வேண்டாம், க.......யும் வேண்டாம்.
உடன்படிக்கை
நம்மிடையேயான அவநம்பிக்கையில்..
நானும் -
நிம்மதியாக தெருவில்
நடமாட முடியாமல்...
நீயும் -
எனது சிறுசிறு அசைவுகளுக்கெல்லாம்
பெரிய ரியாக்ஷன் கொடுப்பதும்...
உண்மையில், நாமிருவரும்
நல்லவர்கள்...
நமக்குள்ளே
அடித்துக்கொள்வதும்
கடித்துக்கொள்வதும் இல்லை..
வேண்டவும் வேண்டாம்..
ஆகட்டும்..
அகிலத்தின் முதல் உடன்படிக்கை.
தெருநாயான
உனக்கும்..
தெருவில் சுற்றும்
எனக்கும்.
There is always something to do that is out of reach for money.
அப்பன் சொத்து பேட்டரி மாதிரி. 100% இருந்தாலும் கொஞ்ச காலத்தில் காலியாயிடும். உன் சம்பார்த்தனை பவர் கனெக்ஷன் மாதிரி. பேட்டரியையும் சார்ஜ் பண்ணி உன்னையும் பாத்துக்கும்.
Not obsessed with Tools and Online services, there needs to be a real software engineering. Like AUTOSAR, Security software and devices.
You are the sole beneficiary or victim of your own karma. So, let your conscience which is not disturbed by any third party decide the best to do now.
அதுதான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
If there is customer meeting, Always have something to show him and impress. He should say "Wow!". Not just going and nodding head for everything and expressions. He should see you knows everything, a ghost. Not for going every meeting and eating Biriyani.
If you decided to do something, then at any situation/environment you will create the time for that. In reverse, if start looking at the situation/environment, you cannot do anything.
When you are in a dealing with a partner, if things moves without talking much, then it is going to be a success. If you need to talk much, then there is some issues. Look at it more carefully to get out of any problem.
Don't be a Chilli Chicken
Better to die than working under anyone from now onward. Somehow, you had not been so far from the industry. Still, It is in your reach only. But, if you continue to work on MiS way, definitely you will be out of track.
People will apply pressure to keep you foolish. Never ever bent. Start things you want to do. That is first priority. MiS is second priority. Be a Master now.
Don't forget. You are an eye patient now. You can work only for sometime.
இதோ இதை யோசிக்கும் கணத்தில் நீ செய்ய வேண்டிய கடமை ஒன்று எஞ்சியிருக்கிறதே, அதை செய்வதே ரமணம்.
--
எப்படியெனில், இத்தேகத்தை செயலில் ஈடுபடுத்துவதன் மூலமும் அலைக்கழிக்கும் எண்ண ஓட்டங்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன. உண்மையான ஆத்மா கர்ம வீரராக வெளிப்படுகிறது. கர்ம உலகில் இதுதான் ரமணம்.
--
Beyond yourself, Beyond your family interests, you have an agenda! You are on an Agenda!!
--
The most you are successful, the least your kids are. So, make them learn what you have gained. Daily speak Japanese, so that they too can learn. Teach about what you are doing. Do not be like Trichy Appa..
--
Zero Screen Time
வேலை ஒருமணி நேரம்.
வெட்டி இரண்டு மணி நேரம்.
Feelings நான்கு மணி நேரம்ன்னு பொழுதை போக்காதே.
நின்னு செஞ்சா நாலே நிமிஷம்தான்.
In India (probably everywhere), remember these things:
1) "Sir! I know there is a fault to be corrected. But, I was thinking that I can just ignore it till you find it". So, at each and every step, try to find the mistakes and command them to correct.
2) "Get the deliveries first. Payment next." Otherwise, you may not get the deliveries at all.
3) "Sit with them and get it done." Or, do not move till it is get it done. Otherwise, your things will not move. All frauds.
4) "Watch how everyone is speaking and know the master plan behind it". When you get doubt on something, immediately ask and clarify. Keep things under your control always. Keep copy of every receipt and tokens. At least, take photo in your phone camera.
5) "Put pressure in Advance."
பெண் என்ற புதைக் குழிக்குள் பொருளேதும் இல்லை.
தினமும் குறைந்தது இரு தடவையாவது குளிக்க வேண்டும். அதில் குறைந்தது ஒரு தடவையாவது வியர்வையில் குளித்திருக்க வேண்டும்.
நீங்கள் விளையாடுபவரா? அல்லது வேடிக்கை பார்ப்பவரா?
வாழ்வில் விளையாடுங்கள். வேடிக்கை பார்க்காதீர்கள்!
விளையாடுபவர் வேடிக்கை பார்ப்பதில்லை.
உன் முன்னால் உள்ள வேலையை தவிர மற்றவர்கள் என்ன செய்கிறார்கள். உலகத்தில் என்ன செய்தி என்று பார்ப்பது வெறும் வெட்டி வேலை மட்டுமன்று. அந்த கணத்தில், நீ உன்னுடைய இருப்பை இழக்கிறாய். வாழ்வதற்கான ஒரு தகுதியை இழக்கிறாய். உன்னுடைய மனசாட்சியை விற்று அந்த வேலையை செய்கிறாய். You lose your ground, conscience and moral ground to live. People like Abdul Kalam and Rathan Tata, they even did not think about a woman in their lifetime. உன்னுடைய இருப்புகளை Reset செய்கிறாய்.
Life itself is like Real-Time OS. There is no static priority for anything. It keeps on Changing. Sometimes health, sometimes money, sometimes kids, sometimes relatives, sometimes work needs to be assigned highest priority.
ஒருவனது சிந்தனையின் உயரம் அல்லது குறிக்கோள் என்பது எவ்வளவு உயரமான சிந்தனையை ஒரு நேரத்தில் அவன் மனம் எண்ணுகிறது என்பது அல்ல.. மாறாக எவ்வளவு உயரத்தில் அவன் மனம் ஒரு கண நேரம் கூட பிடி தளராமல் தொங்கி கொண்டிருந்தது என்பதாகும். அப்படி பிடி தளரும் போது, எவ்வளவு பள்ளத்தில் விழுகிறானோ, அதுவே அவனது உண்மையான சிந்தனையின் உயரம் என்பதாகும்.
As a natural phenomenon, when you walk towards your goal, you should reach it now or then regardless of how far it is. Do you walk? Towards what?
நியூட்டனின் மூன்றாம் விதி, மனதுக்கும் பொருந்தும். அதிகப்படியான சந்தோஷத்தை அனுபவித்த பின், அதைப் பிரிய நேரும்போது அந்தளவுக்கு வெற்றிடத்தையும் அது அனுபவிக்கிறது. மாறாக, கடினப்பட்டு ஒன்றை அடைந்த பிறகு மகிழ்ச்சியை அனுபவிக்கிறது. ஆகவேதான், நிலையான இன்பம் என்ற ஒன்று இல்லை. ஞானிகளின் மனம் ஏற்ற இறக்கங்கள் அற்றது.
Crying is not granted in this world. Particularly, when you cry for your family, you are taking your life for granted. How many leaders risk their own lives, set aside their personal feelings and fought for their community or for the co-human of non-privileged.
You should not speak about your product or services. Your product should speak of itself. Your service itself should be availed by the people. What you do should itself be witnessed by people. Let the flowers bloom by themselves. But, watering is your duty.
எதிர்காலமானது, துணிவு ஒன்றே துணையுடன் நடை போடுபவர்க்கு சொந்தமானது. திரு.மியாசகியை பார். அவருக்கு துணை இருந்தது துணிவு மட்டுமே. இக்காலாத்தை பார். துணிவுடன் செல்பவருக்கு போலீஸ், சட்டம் எல்லாமே வழி விடுகிறது. சொத்தைக் காக்க துணிவு தேவைப்படுகிறது.
---
வள்ளல் பெருமான் கடை விரித்தார், கட்டிக்கொண்டார் எதற்காக?
ஒரு ரயில் நிலையத்தின் விளிம்பில் நின்று மக்களை கவனி. பெங்களூரின் ஒரு பார்க்கின் கல் மேசையில் அமர்ந்து மனிதர்களை நோக்கு. அது கூட்டமல்ல. அது மனிதத் திரள். பெருங்கடலைப் போல, மனித சாகரம். நடை, உடை, பேச்சு, செய்கை மற்றும் எண்ணங்கள் இப்படித்தான் என்றில்லை. இதற்கு ஒழுங்கு என்றெல்லாம் ஒன்றில்லை. நீ நினைப்பது போல இப்படித்தான் இவர்கள் உடை உடுத்த வேண்டும், இப்படித்தான் இவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் இந்த மனிதக் கூட்டத்தை அடிபணிய வைக்க முடியாது. ஆனாலும் அதில் பெரும்பகுதி செம்மறி ஆடுகளை போல எதையோ ஒன்றை நோக்கி ஓடுவதை கவனிக்க முடிகிறது. சில மனிதர்கள் இந்தக் கூட்டத்தை திசை திரும்புவதை நோக்க முடிகிறது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் இயக்கத்தையே வேறு பக்கம் கொண்டு போகிறார்கள்? யார் அவர்கள்? யாரால் முடிகிறது? இந்த மனிதக் காட்டாறு எதை நோக்கிப் பாய்கிறது? அல்லது பாயத் தயாராக இருக்கிறது?
ஒன்றே ஒன்றுதான். டார்வின் சொன்னது போல ஒரு பெரும் திரளில் பிழைக்கத் தகுதி உள்ளது தங்கும். எங்கும் போட்டி. எதிலும் போட்டி. இருவர் கூடும்பொழுது அங்கே மறைமுகமாக கேட்கப்படும் கேள்வி, நீயா? நானா? இந்தப் போட்டியில் நான் வென்றால்தான் வாழ்வு, இல்லையேல் சாவு என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள மறைமுகச் சிந்தனை. "அமருங்கள்! அனைவரும் அமைதியாய் அமருங்கள்! உலகம் ஒட்டுமொத்த மனிதமும் ஆன்மா ஒன்றே! ஆன்மா அழிவதில்லை. இருத்தலில் ஒன்றுமில்லை. போட்டி வேண்டாம். எவ்வுயிரையும் தம்முயிர் போல எண்ணுங்கள்." என்று ஒரே கணத்தில் ஒட்டு மொத்த சாகரத்தையும் உட்கார வைக்க மந்திரக்கோல் ஏதும் உண்டோ? உட்கார வைத்தாலும் எவ்வளவு க்ஷணம்? ஏதோ ஒரு மனதில் கூட, நீயா? நானா? உனக்கா? எனக்கா? என்ற கேள்வி எழாமல் எண்ணங்களை அழிப்பது சாத்தியமோ? இந்த உலகத்தின் சிருஷ்டியே "நான்" என்னும் எண்ணத்தின் வெளிப்படை தானே. எத்தனை கோடி "நான்"கள் முட்டி மோதிக் கொள்ளும்போது சமாதானம் எவ்வாறு சாத்தியமாகும்? இயற்கையில் சமநிலை என்பதை எல்லையற்று சாத்தியப்படுத்த இயலுமா? நீரும் காற்றும் சமநிலையான மேகம் எவ்வளவு காலம் மேகமாகவே தேங்குகிறது? நீரும் சத்தும் சமநிலையான பால் எவ்வளவு நேரம் திரியாமல் இருக்க முடியும்?
எனவே, மனிதம் எப்போதும் ஏறி மிதித்து ஓடுவதையே இயல்பாய் கொண்டுள்ளது. அதற்கான ஊக்க மருந்தை தேடுவதையும் அன்றாட நோக்கமாக கொண்டுள்ளது. எவர் ஊக்க மருந்தை காட்டுகிறாரோ அவரை நோக்கி ஓடுகிறது. அதில் ஒதுங்கியது சில மட்டுமே சமாதானத்தை மருந்தாய் பூசிக்கொள்கிறது. அவை கூட சமாதானத்தை முழுமையாக பற்றாமல் இந்த வழியிலாவது ஏதாவது சக்தி கிடைக்காதா என்று மருந்தாய் மட்டுமே பூசிக் கொள்கிறது.
எந்நிலையிலும் "நான்" என்ற அகங்காரத்தை ஊக்குவிக்கும் மனிதர்கள் ஏமாற்றுபவர்களாகவும் அதை நோக்கி ஓடுபவர்கள் ஏமாறுபவர்களாகவும் இவ்வுலகம் தொடர்கிறது. ஏமாறுபவன் ஒரு கட்டத்தில் வாழத் தகுதி இழக்கிறான். ஏமாற்றுபவன் ஏறி மிதித்து செல்வதையே தொழிலாய் கொண்டுள்ளான். இவ்வுலகம் ஏமாற்றுபவர்/ஏமாறுபவர் உலகம்.
ஏமாறுவதா அல்லது ஏமாற்றுவதா என்பதை நீதான் முடிவு செய்து கொள்ள வேண்டும். நீ எதுவும் செய்யாமல் சோம்பியும் உட்கார்ந்திருக்க முடியாது. உன்னைச் சுற்றி இல்லாவிட்டாலும் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் உன் இருப்பை கேள்வி குறியாக்க, உன்னை ஏறி மிதித்துச் செல்ல ஒருவன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான்.
--
நீ உன்னடைய நேரத்தை போட்டு படிக்கிற அளவிற்கு நியூஸ் ரொம்ப த்ரில்லாக இருக்கிறதா, என்ன? கையடிப்பது போல செய்ததையே செய்து கொண்டு எழுதியதையே எழுதிக்கொண்டு இருக்கும் போராளிகள் மேல் உனக்கு அவ்வளவு ஆர்வமா, என்ன? உன்னடைய முயற்சி ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும், தெரியுமா? ஒரு விதை போட்டால் எப்படி விருட்சமாக கிளைக்கிறதோ, அப்படி இருக்க வேண்டும் உன்னுடைய செயலின் பலன்கள். இருக்கினவற்றை நோண்டி போட்டுவிட்டு போவதா உனக்கு வேண்டும். குறைந்தது நூறு பேராவது பயனடைய வேண்டும். இல்லை என்றால், ஒன்றுமே இல்லாமல் ஊரிலிருந்து உனக்காக மூட்டை சுமந்து வந்து, கொடுத்துவிட்டு போகும் உன் மாமா அளவிற்காவது உன் செயல் பிரயோஜனம் உண்டா, என்ன? எல்லாருக்கும் குறைந்தது பத்து லட்சமாவது கொடேன். அந்தளவிற்கு உன்னிடம் த்ரில் இருக்கிறதா?