Tuesday, March 18, 2025

mozhik kolgai

ஜெமோ சொல்ல வருகின்ற உட்கருத்து சற்று ஆழமானது. குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் நம் சமுதாயத்தில் ஒரு ஆழமான அறிவுசார் தேடலை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அதை பின்பற்ற முடிகிறதோ, இல்லையோ, அவர் கருத்தை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு அனுபவமும் முதிர்ச்சியும் பலருக்கு இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

ஒரு நல்ல Japanese TV program பார்த்ததுண்டு. Beauty parlor-ல் பயன்படுத்தக் கூடிய Plucker செய்வதில் கைத்தேர்ந்த ஒருவர், தனி ஆளாக குடிசைத் தொழில் போன்று செய்து கொண்டிருக்கிறார். தனது தயாரிப்பு எதுவரை விற்றுக்கொண்டிருக்கிறது என்ற ஆராய்ச்சி கூட இல்லாமல் தனக்கே உரிய வெகுளித்தனத்துடன் நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறார். அந்த TV program வழியாக, இத்தாலி நாட்டிலிருக்கிற ஒரு beautician (customer), தான் அந்த Pluckerஐ பயன்படுத்துவதாகவும் அதைப் பயன்படுத்தும் பொது தனது வாடிக்கையாளர் எந்த அசௌகரியத்தையும் உணர்வதில்லை எனவும், அதன் நேர்த்தியைக் கண்டு வியந்து பாராட்டி, "நான் உள்ளவரை தங்களுடைய தயாரிப்பு எனக்குத் தேவை. தயவு செய்து நீங்கள் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். நீங்களும் எனது தொழிலும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம்." என்று கூறுகிறார். என்னமோ செய்துகொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த அவரது பிள்ளைகள் கூட அப்போதுதான் தன் தந்தை எப்படிப்பட்ட நேர்த்தியான தயாரிப்பை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து தன் தந்தையை வியப்புடன் பார்க்கும்போது, அவரது கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது.

எனக்குள் அப்போது பல கேள்விகள். "இன்றைக்கு இதைப் படித்தால்தான், நாளை பிழைக்க முடியும். நாளை அதை செய்தால்தான் நாளை மறுநாள், இப்படி இருக்க முடியும்", என்று விடையில்லாத ஒன்றை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேனா? வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கப் போகிறேனா? இது ஒரு கோழைத்தனமாக படவில்லையா? எப்போது, நின்று நிதானித்து, சிலவற்றை ரசித்து, அடுத்த வேளை சோற்றைப் பற்றி கவலைப்படாமல் ஒரு வீரனாக நின்று, பிடித்தவற்றை செய்யப் போகிறேன், இவர்களைப் போல? என்றெல்லாம் கேள்விகள். இந்த அனுபவத்தில், ஜெமோவின் ஆதங்கமும் எனக்குப் புரிகிறது.

Topic க்குள் வருகிறேன். இன்றைக்கு சென்னையில் 'நாசூக்'காக வாழக்கூடியவர்கள் என்று பார்த்தால், பெரும்பாலும், தமிழ் பேசக்கூடிய வடமாநிலத்தவர் (குறிப்பாக, மார்வாடிகள்) மற்றும் அரைகுறை ஹிந்தியில் பேசி (ஹிந்தி தெரியாத எனக்கே தெரிகிறது, அவரது ஹிந்தி அரைகுறை என்று) வடமாநிலத்தவரை வேலை வாங்கும் நம்மாட்கள் (குறிப்பாக, மேஸ்திரிகள்) தான். சென்னையில் கூட இது சகஜம் என்றாலும், இன்றைய நிலைமையில், ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து செல்லும் கிராமங்களில் கூட வடமாநிலத்தார் ஊடுருவி விட்டதைப் பார்க்கும்போது, "The Great Cultural Infusion" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலையிலும், இந்திய பொருளாதாரம் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், இந்த "vibrant labour market" தான் காரணமோ என்றுகூட எனக்குத் தோன்றும். 

இப்படி, நமது ஒட்டுமொத்த சராசரி சமுதாய சிந்தனையும் கூட, பெரிய படைப்பாக்கங்களிலோ, சமுதாயப் பங்களிப்புகளிலோ, ஆழமான அறிவிலோ கவனம் செலுத்தவில்லை. மாறாக, அரசாங்கமும் சமுதாயமும் "பிள்ளைகளை இதைப் படிக்க வைத்தால், அந்த வேலையில் அமர்த்தி விடலாமா? அயல்நாட்டுக் கம்பெனிகளிடம் அடிமாடுகளை போல விற்றாவது "5000 பேருக்கு வேலை" என்று கணக்கு காண்பிக்கலாமா? இந்த மாதிரி வீடியோ போட்டால் ஏதாவது பிழைப்புக்கு ஆகுமா?" என்ற அளவில்தான் சிந்திக்கிறது. Skill devemopment, அயல் மொழிகளைத் திணிப்பது எல்லாமே இந்த அளவில்தான். "நம் மக்களுக்கு வேலைக்கிடைத்து விட்டது" என்ற குறைந்த பட்ச செயல்திட்டத்துடன் பார்த்தால், குறை சொல்லத் தோன்றவில்லை. It is better that atleast they create the awareness. அதில் சில பல அறிவுஜீவிகளும் உருவாகலாம். அதற்காக, வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டியதில்லை.