Monday, November 4, 2024

maima

வணக்கம். சில நேரங்களில் பெங்களூரில் நடக்கும் நிகழ்வுகளை கேட்கும் போதெல்லாம், மிகவும் வேதனையும் கவலையும் அடைகிறேன். ஆனால், ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதால் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க முடியாது என்பதை மிகவும் உறுதியாக நம்புகிறேன். அடுத்தவருடைய பிரச்சினைகளை புரிந்து கொள்வதிலும், அடுத்தவருடைய தவறுகளையும் இயலாமையையும் மன்னித்து விடுவதிலும்தான் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும் என்பதை அனுபவ பூர்வமாக கண்டு கொண்டிருக்கிறேன். எனவே, யாரிடம் பேசினாலும், முடிந்தால் நல்ல அறிவுரையை, நேர்மறையான சிந்தனையை சொல்கிறேன். இல்லை என்றால், பேசாமல் இருப்பதே மேல் என்று விட்டு விடுகிறேன்.

மேலும், நான் குடும்ப விஷயங்களில் அனுபவம் இல்லாதவன் என்பதால், இந்த சூழ்நிலையில் பேசாமல் இருப்பதையே விரும்புகிறேன். இரண்டு பக்கமும் என்னைவிட வயதில் முதிர்ந்தவர்கள், அனுபவம் அதிகம் உடையவர்கள் இருக்கிறீர்கள். எனவே, தங்களுடைய குடும்ப விஷயங்களில், சூழ்நிலையை நன்றாகவே புரிந்து கொண்டு, நேரிடையாக பேசி, நல்ல முடிவுகளை எடுப்பீர்கள் என நம்புகிறேன். மேலும், தங்களுடைய இந்த குடும்ப விஷயத்தில் என்னுடைய கருத்தை திணிப்பதற்கு, யாரிடமும் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் புரிந்து வைத்துள்ளேன்.

என்னைவிட வயது முதிர்ந்தவர்களை மதிப்பவன் நான். அவர்களுக்கு என்னை விட உலகத்தை பற்றிய அனுபவம் அதிகமாக இருக்கும். மேலும், என்னுடைய சூழ்நிலையே எல்லாருக்கும் இருக்காது. ஒவ்வொருவருடைய சூழ்நிலையும் ஒவ்வொன்றானது. ஆகவே, அறிவுரையாக இல்லாமல், இந்த கால கட்டத்தில், என்னுடைய சொந்த சிந்தனையை, புரிதலை முன் வைக்கிறேன்.